Sun. Nov 17th, 2019

Dina Anjal News

World Top Tamil News Website – Dina Anjal News

மதுரை: செய்தியாளரிடம் காவலர் அடாவடி

1 min read

மதுரை மாவட்டஆட்சியாளர் அலுவலக நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர் செல்வமாரி செய்தியாளர்கள் மாவட்டஆட்சியாளர் அலுவலகத்தில் நுழைவதற்கு அடையாள அட்டை கேட்டார் செய்தியாளர்களும் அடையாள அட்டை காண்பித்தனர் தலைமை காவலர் செல்வமாரி செய்தியாளர்களை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த செய்தியார்கள் ஓன்று திரண்டு காவலரிடம் இப்படி பேசுவது சரியில்லை என்றனர்.தலைமை காவலர் செல்வமாரி செய்தியாளர்ன்னா என்ன டிரஸ்ஸ கழட்டி காட்ட சொன்னாலும் கழட்டி காட்டனும் என்று தலைமை காவலர் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டார்.காவலர் செயல் குறித்து செய்தியாளர்கள் உடனடியாக PROதங்கவேலிடம் நடந்த விபரங்களை சொல்லி கூட்டிவந்தனர். PRO இது பற்றி காவலரிடம் கேட்டதற்கு PRO ன்னா என்ன நாங்க யாரையும் மதிக்க வேண்டியது இல்லைன்னு சொல்ல செய்தியாளர்கள் காவலரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த காவலர்கள் பேசி சமரசம் செய்தனர்.மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலரையே மதிக்காத காவலர் செல்வமாரியா மக்களை மதிக்க போரார் என்று சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் பரவலாக பேசினார்.இச் சசம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.செய்தியாளர்களையும் மாவட்டPro மதிக்க தெரியாத காவலர் செயலுக்கு மாநகர ஆணையாளர் என்ன நடவடிக்கை எடுக்க போரார் என்று செய்தியாளர்கள் எதிர் பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *