Thu. Aug 22nd, 2019

Dina Anjal News

World Top Tamil News Website – Dina Anjal News

திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவி உயிரோடு எரிப்பு.

1 min read
திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவி உயிரோடு எரிப்பு.
கும்பகோணத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ரம்யா. இவர் திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் 2ம் ஆண்டு மாலை நேர வகுப்பில் பயின்று வருகிறார். இவர் காஜாமலை முஸ்லிம் தெருவில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி பயின்று வருகிறார். இவரை காரைக்குடியைச்சேர்ந்த தவச்செல்வன் என்பவர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். தவச்செல்வனின் காதலை ஏற்க மறுத்து வந்துள்ளார் கல்லூரி மாணவி ரம்யா. இந்நிலையில் இன்று ரம்யா தங்கியிருந்த வீட்டிறக்கு சென்று தவச்செல்வன் தன்னை காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தவச்செல்வன்  தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை ரம்யா மீது ஊற்றி தீவைத்து எரித்து விட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரம்யாவை சக மாணவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரம்யாவிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து கே.கே நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *