Thu. Jan 23rd, 2020

Dina Anjal News

World Top Tamil News Website – Dina Anjal News

மது வாங்குவதில் தகராறு

1 min read
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே, மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில், ஆட்டோ டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை அடுத்த, ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர், ஆட்டோ டிரைவர் சங்கர், 30; எடப்பாளையத்தைச் சேர்ந்தவர், பழ வியாபாரி ஆனந்தன், 32; நண்பர்களான இவர்கள், அடிக்கடி மது அருந்துவது வழக்கம்.நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, ஏந்தல் பைபாஸ் சாலை அருகே, மது அருந்த சென்றனர். அங்கு, மது வாங்குவதில், இருவரிடையே தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த ஆனந்தன், சங்கரின் தலையில் கல்லால் தாக்கினார். இதில் மயங்கி விழுந்த சங்கர் உயிரிழந்தார். தலைமறைவாக உள்ள ஆனந்தனை, போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *