Tue. May 26th, 2020

Dina Anjal News

World Top Tamil News Website – Dina Anjal News

மதுரை கீழ மாரட் வீதி 6 கடைகளுக்கு சீல் வைப்பு

1 min read

 

6 கடைகளுக்கு சீல் வைப்பு

மதுரை:
மதுரை மாநகராட்சி பகுதிகளில் திறக்கப்பட்ட கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறும் கடைகள் மாநகராட்சி அலுவலர்களால் பூட்டு போடப்பட்டு சீல் வைக்கப்படுகிறது.

இதுவரை மாநகரில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று கீழ மாரட் வீதி, கீழ மாசி வீதி மற்றும் கீழ ஆவணி மூல வீதி ஆகிய பகுதிகளில் சமூக இடைவெளியினை கடைபிடிக்காத 6 கடைகள் சீல் வைக்கப்பட்டன. இந்த பணியில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் முருகன், செல்வகுமார், வருவாய் உதவியாளர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *