Tue. May 26th, 2020

Dina Anjal News

World Top Tamil News Website – Dina Anjal News

மதுரை கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு உள்ளது- ஆர்.பி.உதயகுமார்

1 min read

 

கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. மதுரையில் கொரோனா அவசர கால தடுப்பு கட்டுப்பாட்டு மையம் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. இதனை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று தொடங்கி வைத்தார்.

 

 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா நோய் தொற்று தடுப்பு நட வடிக்கைகளில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 

 

இதன் காரணமாக நோய் தடுப்பு மற்றும் உயர்தர சிகிச்சை அளித்து நோயை குணப்படுத்துவது ஆகியவற்றில் தமிழகம் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளது. மேலும் இறப்பு விகிதத்தையும் மிக மிக குறைவாக கட்டுப்படுத்தி உலக அளவில் சாதனை படைத்துள்ளோம்.

 

 

தமிழக அரசு அறிவித்துள்ள வரைமுறைகள் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் மதுரை மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு முன் மாதிரியாக உள்ளது. மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் திட்டமிட்டு திறம்பட செயல்பட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.

 

 

மக்களும் முழு ஒத்துழைப்பை வழங்கி கொரோனா நோய் தடுப்பு பணியை அரசு திறம்பட செயல்பட உதவி வருகின்றனர். இன்று மாலை கரையை கடக்க உள்ள அம்பன் புயலால் தமிழகத்திற்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. இருப்பினும் கடலோர மக்கள், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மாநில பேரிடர் மேலாண்மை தடுப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மையில் இருந்து மாநில பேரிடர் தடுப்பு மையத்திற்கு ரூ.510 கோடி நிதி வழங்கப்பட்டு உள்ளது. இதனை அதிகரித்து வழங்க முதல்-அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *