Tue. May 26th, 2020

Dina Anjal News

World Top Tamil News Website – Dina Anjal News

ஊரடங்கை மீறியதாக மதுரையில் 9,847 பேர் கைது

1 min read

 

மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளது. எனவே ஊரடங்கு சட்டத்தை மீறி மோட்டார் சைக்கிளில் வெளியே செல்பவர்களை கைது செய்து அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை போலீசார் முடுக்கி விட்டு வருகின்றனர்.

ஊரடங்கு தடைச் சட்டத்தை மீறியதாக விளக்குத்தூணில் ஒரு வழக்கு பதிவாகி உள்ளது. இதே போல தெற்குவாசலில் 7 வழக்கும், ஜெய்ஹிந்த் புரத்தில் 4 வழக்குகளும் பதிவாகி உள்ளது.

 

கீரைத்துறை போலீஸ் நிலையத்தில் ஊரடங்கு தடை சட்டத்தை மீறியதாக ஒரு வழக்கும், திருப்பரங்குன்றத்தில் ஒரு வழக்கும், அவனியாபுரத்தில் 6 வழக்குகளும், திருநகரில் ஒரு வழக்கும் பதிவாகி உள்ளன.

 

திலகர் திடல் போலீசில் ஊரடங்கு தடை சட்டத்தை மீறியதாக 9 வழக்குகளும், எஸ்.எஸ்.காலனியில் 8 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

 

செல்லூரில் 5 வழக்குகள் பதிவாகி உள்ளது. அண்ணாநகர் மண்டலத்தில் கே.புதூர், மதிச்சியம், அண்ணாநகர் ஆகிய 3 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் கே.புதூரில் 8 வழக்குகளும், அண்ணாநகரில் 9 வழக்குகளும் பதிவாகி உள்ளது.

 

மதுரை மாநகரில் நேற்று (21-ந்தேதி) மட்டும் ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக 60 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக 69 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

 

மதுரை மாநகரை பொறுத்தவரை மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நேற்று (21-ந்தேதி) வரை ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக 8,984 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது தொடர்பாக 9847 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 4618 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *