Thu. Dec 12th, 2019

Dina Anjal News

World Top Tamil News Website – Dina Anjal News

திண்டுக்கல்கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

1 min read
திண்டுக்கல் நகரில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் பின்புறம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் இன்று 27/06/2/19 வியாழன் காலை 10 மணிக்கு நடைபெறுவதாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து இன்று நடைபெறும் கூட்டத்திற்கு நேற்று இரவு மாற்றுத்திறனாளிகளுக்கும்… மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் பொறுப்பாளர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது… இதன் காரணமாக மேற்படி அவசரகதியில்… பொறுப்பற்று நடைபெறும் கூட்டத்தை நடத்தக் கூடாது என்றும்… முறையாக முன் கூட்டியே அறிவிப்பு செய்து பின்பு தான் நடத்த வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.. இன்று அனைத்து நிருவாகிகளும் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை செய்தோம். அதன்படி மேற்படி கூட்டத்தை கோட்டாட்சியர் காலையில் கூட்டத்தை நடத்தவில்லை…  அனைத்து சங்க நிர்வாகிகளை மேற்படி கோட்டாட்சியர் பேச்சுவார்தைக்கு அழைத்தார்… காலை 10: 30 மணி முதல் 12 மணி வரை பேச்சுவார்த்தை நடைபெற்றது…  பேச்சுவார்த்தையில் சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்களான 1) முறையாக மாதம் தோரும் அனைத்து தரப்பிலும் தகவல்களை கொடுத்து கூட்டங்களை நடத்துகிறோம்.. 2) அனைத்து தாலுகா வாரியாக நடத்த வேண்டும்.. 3) மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வழங்குவதை முறைப்படுத்தி கொடுக்க வேண்டும்…4) ஆவின் பாலகம் அமைப்பதில் உள்ள பிரச்சினைகளை நேரிடையாக தலையிட்டு முடித்து கொடுக்க வேண்டும் 5) மாற்றுத்திறனாளிகள் சங்கம் என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளிடம் பொய்களை கூறி வசூல் வேட்டை நடத்தும் ஒரு மாநில சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதின் பேரில் பேச்சுவார்த்தை முடிவு பெற்று போராட்டம் திரும்ப பெறப்பட்டது… மேற்படி பேச்சுவார்த்தையில்*
*திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு  குழு*
கலந்து கொண்ட நிருவாகிகள்
1) M. அப்துல் மாலிக்
மாநில தலைவர்
தமிழக மாற்றுத்திறனாளிகள் உரிமை மீட்பு சங்கம்
2) வழக்கறிஞர்.
M. முகமது அனஸ்
மாநில செயலாளர்
தமிழக மாற்றுத்திறனாளிகள் உரிமை மீட்பு சங்கம்
3) தெரசா. S. முபாரக்
தலைவர்
திண்டுக்கல் மாவட்ட அன்னை தெரசா மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம்.
4) கூடு.R.  முருகன்.
மாநில துணை செயலாளர்
தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் சங்கம்.
5) G. கோபிநாத்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
சக்ஷ்சம் மாற்றுத்திறனாளிகள் சங்கம்
6) V. மோகன் ராஜ்
மாநில துணை தலைவர்
டிசம்பர் 3 அமைப்பு
7) M. சதிஸ் குமார்
திண்டுக்கல் மாவட்ட துணை செயலாளர்
டிசம்பர் 3 அமைப்பு
ஆகிய நிருவாகிகள் கலந்துக்கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *