ஜனவரி 14-ந் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் சென்னை வருகிறார்
1 min read
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி 14-ந் தேதி மீண்டும் சென்னை வர திட்டமிட்டுள்ளார்.
அமித்ஷா வருகையின்போது அதிமுக-பாஜக இடையே தொகுதி உடன்பாடு இறுதியாக வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே நவ.21ந்தேதி அமித்ஷா சென்னை வந்தபோது பாஜகவுடன் அதிமுக கூட்டணி என அறிவிக்கப்பட்டது. சட்டசபை தேர்தல் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் குறித்தும் அமித் ஷா விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது