தங்கம் விலை கடந்த 2 நாட்களில் ரூ.1,048 வீழ்ச்சி : ஒரு சவரன் ரூ.38,032க்கு விற்பனை
1 min read
அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், தங்கம் விலை இன்று திடீரென சவரனுக்கு 408 குறைந்தது. தங்கம் விலை கடந்த 3 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. தொடர்ச்சியாக 7 நாட்களில் சவரன் 1384 அளவுக்கு அதிகரித்தது. இதனால் சவரன் 39 ஆயிரத்தை தாண்டியது. பொங்கல் திருநாள் மற்றும் வரும் நாட்களில் திருமணம் உள்ளிட்ட விஷேச நாட்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு 80 குறைந்து ஒரு கிராம் ₹4,805க்கும், சவரனுக்கு 640 குறைந்து ஒரு சவரன் 38,440க்கும் விற்கப்பட்டது.
அதே போல இன்றும், தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு 51 குறைந்து ஒரு கிராம் ₹4,754க்கும், சவரனுக்கு 408 குறைந்து ஒரு சவரன் 38,032க்கும் விற்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் சவரன் ரூ.1,048 சரிந்துள்ளது. தங்கம் விலை திடீர் சரிவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், ‘‘அமெரிக்காவின் புதிய அதிபர் பதவியேற்கும் வரை தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் தான் காணப்படும். எப்போது விலை ஏறும், எப்போது குறையும் என்பதை கணிக்க முடியாத நிலை சூழ்நிலை உள்ளது