Thu. Aug 22nd, 2019

Dina Anjal News

World Top Tamil News Website – Dina Anjal News

அருண் ஜெட்லியை சந்தித்து நலம் விசாரிக்கிறார் ஜனாதிபதி

1 min read
அருண் ஜெட்லியை சந்தித்து நலம் விசாரிக்கிறார் ஜனாதிபதி
புதுடெல்லி,
கடந்த 9-ம் தேதி  அருண் ஜெட்லி மூச்சுத் திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அருண் ஜெட்லி சேர்க்கப்பட்டதும் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோர்  நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
கடந்த சனிக்கிழமையன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.  இந்நிலையில்   ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று சென்று நலம் விசாரிக்கிறார்.
66 வயதான அருண் ஜெட்லி தனது உடல்நிலையைக் காரணம் காட்டி கடந்த தேர்தலின்போதே தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *