Wed. Nov 13th, 2019

Dina Anjal News

World Top Tamil News Website – Dina Anjal News

திருப்பூர்|மது கேட்டு தன்னை தானே தாக்கி பொது இடத்தில் தகராறு

1 min read

 

மதுபோதையில் மேற்கொண்டு மதுபானம் வாங்கித் தரச்சொல்லி தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டு அனைவரையும் மிரட்டிய இளைஞரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையம் சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் மது பாட்டில்கள் மூலம் தன்னை தானே காயப்படுத்தி கொண்டு போவோர் வருவோரிடம் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி மது பானம் வாங்கித் தரச்சொல்லி வற்புறுத்தி உள்ளார். அரசு மதுபான கடை முன் ரத்தம் சொட்ட சொட்ட இளைஞர் ஒருவர் மிரட்டி வருவது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பல்லடம் போலீசார் இளைஞரிடம் லாவகமாகப் பேசி அவரை பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கு அவரிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது அவர் மேற்கு பல்லடத்தை சேர்ந்த மூர்த்தி என்பது தெரியவந்தது இவர் ஞாயிற்றுக்கிழமை குடிப்பதற்காக அரசு மதுபான கடைக்கு வந்ததும் கையிலிருந்த பணத்திற்கு குடித்து முடித்த பின் மேற்கொண்டு குடிக்கும் ஆவலில் அருகில் இருந்த மதுபாட்டில்களை உடைத்து தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டு அனைவரிடமும் மது வாங்கித் தரச்சொல்லி மிரட்டியதும் தெரியவந்தது இதனையடுத்து அவருக்கு பல்லடம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் போதை தெளிந்த மூர்த்தி போலீசார் கைது செய்து விடுவார்களோ என்ற பயத்தில் அங்கிருந்து தலைமறைவானார். அரசு மதுபான கடையில் ரத்தம் சொட்டச் சொட்ட மது வாங்கித்தர சொல்லிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *